செஞ்சொற்செல்வரின் பிறந்தநாளை முன்னிட்டுக் குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் மலர் நந்தவனம் உருவாக்கம்

தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவரும், சைவத்தமிழ் அறிஞருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகனின் 62 ஆவது பிறந்தநாளை முன்னிட்டுக் குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(29.05.2023) விசேட பொங்கலும், பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது.

அன்றையதினம் காலை-06 மணியளவில் மேற்படி ஆச்சிரம முன்றலில் விசேட பொங்கல் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து காலை-09.15 மணியளவில் ஆச்சிரம முன்றலில் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமானுக்கும், ஆச்சிரமத்தினுள் எழுந்தருளியுள்ள சிவலிங்கப் பெருமானுக்கும், ஈழத்து, இந்தியச் சித்தர்கள், ஞானிகளின் உருவப் படங்களுக்கும் பூசை  வழிபாடுகள் நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து செஞ்சொற்செல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆச்சிரம வளாகத்தில் மலர் நந்தவனமொன்றை உருவாக்குவதற்கான ஆரம்ப நிகழ்வும் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 (செ.ரவிசாந்)