கோண்டாவில் சிவகாமி அம்பாள் தேர்த் திருவிழாவில் பலரினதும் கவனத்தை ஈர்த்த பறவைக்காவடி

கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஆலய வருடாந்த வசந்த வைகாசி மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(02.06.2023) சிறப்பாக இடம்பெற்றது.

இவ் ஆலயத் தேர்த் திருவிழாவை முன்னிட்டுப் பல அடியவர்கள் காவடிகள் எடுத்துத் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

இந்நிலையில் கோண்டாவிலைச் சேர்ந்த சாள்ஸ் என்ற இளைஞர் உரும்பிராய் மூன்று கோவிலடியிலிருந்து உடலின் பல பகுதிகளிலும் பெரிய முள்ளுகள் குத்திப் பலாலி வீதியூடாக மேற்படி ஆலயத்தை நோக்கிப் பறவைக் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் நிறைவேற்றினார்.

ஆலயத்தில் திரண்டிருந்த அடியவர்கள் மற்றும் வீதியால் சென்ற பொதுமக்கள் பலரினதும் கவனத்தை மேற்படி பறவைக் காவடி வெகுவாக ஈர்த்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.