குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகருக்கு நாளை கொடியேற்றம்

குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை(06.06.2023) முற்பகல்-11 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் பன்னிரெண்டு தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவம் சிறப்பாக நடைபெறும்.

எதிர்வரும்- 14 ஆம் திகதி புதன்கிழமை மாலை-05 மணியளவில் வேட்டைத் திருவிழாவும், 15 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு-07.30 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல்-11 மணியளவில் தேர்த் திருவிழாவும், 17 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல்-11 மணியளவில் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் இரவு-07.30 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் இடம்பெறவுள்ளதுடன் மஹோற்சவ காலங்களில் தினமும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுமெனவும் மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.