தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைகளுக்காகச் சமரசமின்றிப் போராடி வரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினதும், கட்சி உறுப்பினர்களினதும் கைதினைக் கண்டித்தும், தொடரும் தமிழ்மக்கள் மீதான ஒடுக்குமுறையைக் கண்டித்தும், பிரித்தானிய அரசு உடனடியாகத் தலையிடக் கோரியும் நாளை வியாழக்கிழமை(08.06.2023) பிற்பகல்-02 மணியளவில் லண்டனில் அமைந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மேற்படி போராட்டத்தில் அனைத்துத் தமிழ்த்தேசிய மக்களுடன் மக்களையும் இணையுமாறு ஐக்கிய இராச்சிய ஈழத்தமிழர் பேரவையினர் அழைத்துள்ளனர்.