மக்கள் கலை இலக்கிய முன்னோக்கில் ஈழத்தமிழ் சிறுகதைகள்: கொக்குவிலில் நாளை ஆய்வரங்கு

தேசிய கலை இலக்கியப் பேரவையின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் கலை இலக்கிய முன்னோக்கில் ஈழத்தமிழ் சிறுகதைகள் எனும் தலைப்பிலான மாதாந்த ஆய்வரங்குத் தொடர்- 05 நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(18.06.2023) மாலை-04 மணி முதல் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஆய்வாளரும், எழுத்தாளருமான சி.ரமேஷ் ஆய்வுரையை நிகழ்த்தவுள்ளார். தொடர்ந்து சபையோரின் கருத்துரைகளுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தேசிய கலை இலக்கியப் பேரவையினர் அழைத்துள்ளனர்.