அரியாலையில் நாளை மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம், சரஸ்வதி மத்திய நூல் நிலையம் ஆகியவற்றின் 104 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(18.06.2023) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-12.30 மணி வரை ஏ-9 வீதி, அரியாலையில் அமைந்துள்ள மேற்படி சனசமூக நிலையப் பத்திரிகைப் பகுதியில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் கலந்து கொண்டு உயிர் காக்கும் உன்னத பணியில் பங்காளர் ஆகுமாறும், இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் 0772247427 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.