பொன்னாலை வரதராஜருக்கு மஹா கும்பாபிஷேகப் பெருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா அடுத்தமாதம்-07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-08.45 மணி முதல் காலை-10.15 மணி வரையுள்ள சுப வேளையில் இடம்பெறவுள்ளது.

மஹா கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்கக் கிரியைகள் நாளை சனிக்கிழமை(01.07.2023)  அதிகாலை-05.30 மணியளவில் ஆரம்பமாகும்.

எதிர்வரும்-04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-08 மணி முதல் 06 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை-03 மணி வரை  அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவமும் நடைபெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.