இலவச யோகக் கலைக் கற்கை நெறியின் புதிய பிரிவு நல்லூரில் ஆரம்பம்

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடாத்தப்பட்டு வருகின்ற யோகக்கலைக் கற்கை நெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பின் வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை(10.06.2023) காலை-06 மணியளவில் ஆரம்பமானது. 

சனி, ஞாயிறு தினங்களிலும், அரச விடுமுறை தினங்களிலும் காலை-06.00 மணிமுதல் காலை-08.00 மணி வரை நடைபெறும் இவ் வகுப்புக்களில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் இருபாலாரும் வயது வேறுபாடின்றிக் கலந்து கொள்ள முடியும்.

சுமார் மூன்று மாத காலங்களைக் கொண்டமைந்த இவ் அடிப்படைக் கற்கைநெறியைப்  பூரணமாக முடிப்பவர்களுக்கு கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, மேலதிக தகவல்களை 0212222203 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.