மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலையமான கருவி நிறுவனத்தின் தசவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(11.06.2023) காலை-10 மணி முதல் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் கருவி நிறுவனத்தின் தலைவர் கனகலிங்கம் தர்மசேகரம் தலைமையில் இடம்பெறவுள்ளது.
மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் திருமதி.கோசலை மதன் பிரதம விருந்தினராகவும், வடமாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் செல்வி. அகல்யா செகராஜா சிறப்பு விருந்தினராகவும், வலிகாமம் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் சுப்ரமணியம் ஸ்ரீகுமரன், கருவி நிறுவனத்தின் ஐக்கிய இராச்சிய அறங்காவலர் சபைத் தலைவர் சிவாஜி சேகரம் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, அனைவரையும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கருவி சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.