ஏழாலைச் சிவனுக்கு நாளை கொடியேற்றம்

ஏழாலை எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் ஒன்றான ஏழாலைச் சிவன் என அழைக்கப்படும் ஏழாலை புங்கடி சொர்ணாம்பிகை உடனுறை அம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை சனிக்கிழமை(17.06.2023) காலை-10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவம் நடைபெறும்.

எதிர்வரும்-19 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-10.30 மணியளவில் திருவாசக விழாவும், 21 ஆம் திகதி புதன்கிழமை இரவு-07 மணியளவில் தீபத் திருவிழாவும், 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல்-02.30 மணியளவில் வேட்டைத் திருவிழாவும், 24 ஆம் திகதி சனிக்கிழமை இரவு-08 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-10.30 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள் 26 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-10 மணியளவில் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் இரவு-07 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் இடம்பெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, கொடியேற்றம், தேர் மற்றும் தேர், தீர்த்தோற்சவம் தவிர்ந்த ஏனைய திருவிழாக்கள் காலை உற்சவம் காலை-08.30 மணியளவிலும், மாலை உற்சவம் மாலை-06 மணியளவிலும் ஆரம்பமாகும் என்பதுடன் மஹோற்சவ காலங்களில் தினமும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

(செ.ரவிசாந்)