கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையின் 20 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழா நாளை திங்கட்கிழமை (03.07.2023) காலை-09.30 மணி முதல் மேற்படி பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், சைவத்தமிழ் அறிஞருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தம்பதிகள் பிரதம விருந்தினராகவும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வைத்தியகலாநிதி வை.மனோமோகன் தம்பதிகள் சிறப்பு விருந்தினராகவும், நல்லூர் பிரதேச செயலர் திருமதி.எழிலரசி அன்ரன் யோகநாயகம் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் சிறப்பு மலர் வெளியீடு, விசேட கெளரவிப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
எனவே, அனைவரையும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு சிவபூமி மனவிருத்திப் பாடசாலைச் சமூகமும், சிவபூமி அறக்கட்டளை நிர்வாகமும் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.