நயினாதீவு நாகபூசணித் தாய்க்கு நாளை தேர்த் திருவிழா: முழுமையான நேர விபரம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய சோபகிருது வருட மஹோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை(02.07.2023) காலை-09 மணியளவில் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளது.

நாளை அதிகாலை-03.30 மணிக்கு ஆயத்தமணி, அதிகாலை-04 மணிக்கு காலைப் பூசை, காலை-04.30 மணிக்கு அபிஷேகம், அதிகாலை-05.30 மணிக்கு விசேட பூசை, காலை-06 மணிக்கு தம்ப பூசை, காலை-07 மணிக்கு வசந்தமண்டபப் பூசை, காலை-08.30 மணிக்கு நாகபூசணி அம்மன் சித்திரத் தேரில் ஆரோகணம், காலை-09 மணிக்கு அம்மனின் சித்திரத் தேர்ப் பவனி ஆரம்பம்,  நாளை மாலை-04 மணியளவில் பச்சை சாத்தி சித்திரத் தேரிலிருந்து நாகபூசணி அம்மன் அவரோகணம் செய்யும் திருக்காட்சி  நடைபெறுமென மேற்படி ஆலய அறங்காவலர் சபையினர் தெரிவித்துள்ளனர்.  

(செ.ரவிசாந்)