மாதகலில் 143 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இருமாடிக் கட்டடத் திறப்பு விழாவும்

யாழ்.மாதகல் சென்.தோமஸ் றோமன் கத்தோலிக்கப் பெண்கள் பாடசாலையின் 143 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் புதிய இருமாடிக் கட்டடத் திறப்பு விழாவும் நாளை மறுதினம்  வெள்ளிக்கிழமை (18.08.2023) மாலை-04 மணியளவில் பாடசாலை வளாகத்தில் மேற்படி பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

பாடசாலை அதிபர் திருமதி.ஜெ.ஜெ. வெலிசிற்றா றமணி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் யாழ்.மறை மாவட்ட ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் க.ஜெ.பிறட்லி, வடக்கு மாகாணக் கட்டடங்கள் திணைக்கள வடிவமைப்புப் பொறியியலாளர் எஸ்.மேனன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.