வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்தக் காம்யோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா நேற்றுத் திங்கட்கிழமை(14.08.2023) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
சித்திரத் தேர்களின் வீதி உலா நடைபெற்ற போது அடியவர்கள் பலரும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். இந் நிலையில் குடும்பப் பெண்மணியொருவர் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் பிரதான தேரின் பின்புறமாகச் செதில் காவடி எடுத்து ஆடி வந்த காட்சி தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெரும்பாலான அடியவர்களை வியப்பில் ஆழ்த்தியது.