குப்பிழான் முத்தர்வளவு சேதுகாவலப் பிள்ளையார் அலங்கார உற்சவம் ஆரம்பம்

"முத்தர்வளவுப் பிள்ளையார்" என அழைக்கப்படும் யாழ். குப்பிழான் முத்தர்வளவு சேதுகாவலப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை(15.08.2023) மாலை-06.30 மணியளவில் விசேட அபிஷேக பூசைகளுடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ்வாலய அலங்கார உற்சவம் இடம்பெறவுள்ளது. உற்சவ நாட்களில் தினமும் மாலை-6.30 மணியளவில் பூசைகள் ஆரம்பமாகும். 

இதேவேளை, அலங்கார உற்சவத்தின் இறுதிநாளான எதிர்வரும்-24 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல்-10 மணியளவில் 108 சங்காபிஷேகம் நடைபெறுமென மேற்படி ஆலய நிர்வாகசபை தெரிவித்துள்ளது. 

(செ.ரவிசாந்)