யாழ். கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய சோபகிருது வருட மஹோற்சவப் பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை(14.08.2023) முற்பகல்-11 மணியளவில் அடியவர்களின் அரோகராக் கோஷங்களுக்கு மத்தியில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து வள்ளி- தெய்வயானை சமேத முருகப் பெருமானும், விநாயகப் பெருமானும் அலங்கார ரூபமாக உள்வீதி, வெளி வீதி உலா வரும் திருக்காட்சி இடம்பெற்றது.
இதேவேளை, தொடர்ந்தும் பதினெட்டுத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா நடைபெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)

