கொழும்புத்துறையில் இரத்ததான முகாம் நிகழ்வு: 20 பேர் ஆர்வத்துடன் குருதிக் கொடை

கொழும்புத்துறை செபமாலை அன்னை ஆலய இளையோர் ஒன்றியமும், கொழும்புத்துறை சென்.றொசாறியன் சனசமூக நிலையமும் இணைந்து காலமான அமரர்களான யேசுதாஸ் சுபீட்சன், ராஜேஸ்கண்ணா டெனிஸ்ராஜ் ஆகியோரின் நினைவாக முன்னெடுத்த இரத்ததான முகாம் நிகழ்வு அண்மையில் யாழ்.கொழும்புத்துறை செபமாலை அன்னை ஆலய முகப்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் ஒரு யுவதி மற்றும் இளைஞர்களென 20 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.                  

இதேவேளை, குறித்த இரத்ததான முகாம் நிகழ்வு இந்த வருடம் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டதுடன் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்து நடாத்தப்படுமென இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 


(செ.ரவிசாந்)