இணுவிலில் நாளை பேராசிரியர் விக்கினேஸ்வரனின் நினைவேந்தலும் நினைவுப் பேருரையும்

மறைந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்கினேஸ்வரனின் நினைவேந்தலும் நினைவுப் பேருரையும் நிகழ்வு நாளை சனிக்கிழமை(05.08.2023) மாலை-03.30 மணியளவில் இணுவில் அறிவாலயத்தின் ஏற்பாட்டில் இணுவில் அறிவாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் "ஊடகப் பெருவெளியில் செயற்கை நுண்ணறிவு" எனும் தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றுவார். 

(செ.ரவிசாந்)