பறாளாய் முருகன் தொடர்பான வர்த்தமானியின் எதிரொலி : சுழிபுரத்தில் நாளை போராட்டம்

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய வளாகத்திலுள்ள அரசமரம்  வர்த்தமானியில் சங்கமித்தையால் வைக்கப்பட்ட அரசமரமெனப் பிரசுரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை(05.08.2023) காலை-10 மணியளவில் சுழிபுரம் பறாளாய் முருகன் சந்தியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.    

அனைத்துத் தமிழ்த்தேசிய உணர்வாளர்களையும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.