சுன்னாகத்தில் நாளை யாழிசைக் கவித் தடாகத்தின் நூல் வெளியீடும் இலக்கியச் சந்திப்பும்

யாழிசைக் கவித் தடாகத்தின் நூல் வெளியீடும் இலக்கியச் சந்திப்பும் நிகழ்வு நாளை  ஞாயிற்றுக்கிழமை (06.08.2023) பிற்பகல்-01.30 மணி முதல் சுன்னாகம் பொதுநூலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

யாழிசைக் கவித் தடாக அமைப்பின் நிறுவுநரும், கவிஞருமான உடுவிலூர் கலா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் யாழ்.மாவட்டச் செயலக கலாசார உத்தியோகத்தர் இ.கிருஷ்ணகுமார், வலிகாமம் தெற்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் இ.மயூரநாதன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும், கனடாவைச் சேர்ந்த வள்ளுவன் இணைப்பள்ளியின் நடத்துனர்களான ஜெ.சோமசுந்தரம், திருமதி.ஜோதி ஜெயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் அருண் செல்லப்பா மற்றும் சுவிற்சர்லாந்து தமிழன்னை அறிவாலய நிறுவுநர் திருமதி.அங்கயற்கண்ணி செல்வகுமார் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேற்படி நிகழ்வில் யாழ். கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாசாலையின் ஆசிரியை திருமதி.தயாளனி சிவநாதன் எழுதிய கருக்கூடும் மேகங்கள் நூல் வெளியீடு செய்து வைக்கப்படவுள்ளது. அத்துடன் அடுத்த சந்ததிக்கு  கையளிப்போம் எனும் தலைப்பிலான கவியரங்கமும், புரையோடி நிற்கும் சமூகச் சீரழிவுகள் குடும்பங்களாலா? அறிவியலாலா? எனும் தலைப்பிலான பட்டிமன்றமும் நடைபெறவுள்ளன.