அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர் மற்றும் இளஞ்சைவப்புலவர் பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் தெரிவித்துள்ளார்..
இதற்கமைய சைவப்புலவர் பரீட்சையில் மூத்ததம்பி- சிவகுமாரன் (கொக்கட்டிச்சோலை), கந்தசாமி கைலைநாதன் (மானிப்பாய்) , குணசிங்கம். கந்தபாலன் (கோப்பாய் ), திருமதி. சிவப்பிரியா ராஜ்குமார்(இணுவில்) , பராபரம் துளசிரஞ்சன்(மட்டக்களப்பு), பிரம்மஸ்ரீ.குமாரசாமி சர்மா சுவாமிநாதசர்மா (இணுவில்)ஆகியோர் சித்தியடைந்துள்ளனர்
இளஞ்சைவப்புலவர் பரீட்சையில் மகேந்திரன் வினோக்சன் (பொலனறுவை) , அருமைநாதன் ஸதிஸ்குமார்(திருகோணமலை), செல்வி.கனகேந்திரன் யோகமணி(திரனியகல) ,செல்வி. நடராஜா தர்ஷிகா(பொலன்னறுவை) , சுதாகரன் ஸர்காந் (களுவாஞ்சிக்குடி), செல்வி. அழகேந்திரன் நிலாந்தினி(மூதூர்), செல்வி.பானுப்பிரியா தில்லைமணி(வட்டுக்கோட்டை) ஆகியோர் சித்தியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.