சிறப்பாக நடைபெற்ற உரும்பிராய் காளி அம்பாள் தேர்த் திருவிழா

யாழ்.உரும்பிராய் ஸ்ரீ  காளி அம்பாள் ஆலய சோபகிருது வருட மஹோற்சத்தின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் திங்கட்கிழமை(31.07.2023) பக்திபூர்வமாகவும்,  சிறப்பாகவும் நடைபெற்றது.


 காலை-08.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து காளி அம்பாள் திருநடனத்துடன் உள்வீதியில் எழுந்தருளிக் காலை-10 மணியளவில் ஆலய முன்றலில்           

நிறுத்தப்பட்டிருந்த சித்திரத் தேரில் எழுந்தருளினார். சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு ஓதப்பட்டுச் சிதறுதேங்காய்கள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷங்களிற்கு மத்தியில் காலை-10.30 மணியளவில் சித்திரத்தேர்ப் பவனி ஆரம்பமானது.

ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் இணைந்து சித்திரத் தேரின் வடம் தொட்டிழுத்தனர். இவ் ஆலய தேர்த் திருவிழாவில் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, இவ் ஆலய மஹோற்சவத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(01.08.2023) காலை-10.30 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், நேற்று மாலை கொடியிறக்க உற்சவமும் சிறப்பாக நடைபெற்றதாக மேற்படி ஆலய பரிபாலன சபையின் தலைவர் இராசா தர்மலிங்கம் தெரிவித்தார். 

(செ.ரவிசாந்)