நல்லூரில் நாளை யாழ்.முயற்சியாளர்-2023 விற்பனைக் கண்காட்சி ஆரம்பம்சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கும், அவற்றிற்கான சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் முகமாகவும் யாழ்.மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் “யாழ் முயற்சியாளர் 2023” எனும் விற்பனைக் கண்காட்சி நாளை புதன்கிழமையும்(29.08.2023), நாளை மறுதினம் வியாழக்கிழமையும் (30.08.2023) காலை-09 மணி முதல் யாழ்.நல்லூர் முத்திரைச்சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்படி கண்காட்சியினைப் பார்வையிட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதுடன் தரமான உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்து பயன்பெறுமாறும் யாழ்.மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.