நல்லூரில் நாளை மெளனத்தீவு நூல் வெளியீட்டு விழா

எழுத்தாளர் வே.பரிபுரபவன் எழுதிய மெளனத்தீவு நூல் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை(12.08.2023)  மாலை-04 மணி முதல் நல்லூர் ஸ்ரீதுர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது.  

சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெறவுள்ள நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த விரிவுரையாளர் வை.ஈழலிங்கம் ஆகியோர் வாழ்த்துரைகள் ஆற்றவுள்ளனர். ஹற்றன் நைஷனல் வங்கியின் பிராந்திய முகாமையாளர் மகேசன் தயாகரன் நூலின் வெளியீட்டுரையையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் கலாநிதி.மகேந்திரன் திருவரங்கன் நூலின் நயப்புரையையும் நிகழ்த்தவுள்ளனர்.