மலையக எழுச்சிப் பாத யாத்திரையின் நிறைவு விழா

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு, தேசிய கிறிஸ்தவ மன்றம் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து நடாத்தும் மலையக மக்களின் 200 ஆம் ஆண்டு வாழ்க்கைப் பயணத்தை நினைவு கூரும் மலையக எழுச்சிப் பாத யாத்திரையின் நிறைவு விழா நாளை  சனிக்கிழமை(12.08.2023) மாத்தளை  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயக் கல்யாண மண்டபத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

நாளை காலை-09 மணியளவில் பாக்கியம் தேசியப் பாடசாலை மைதானத்திலிருந்து கலாசார ஊர்வலம் ஆரம்பமாகும்.    

இதேவேளை, அனைவரையும் இந்த நிகழ்வில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.