யாழ்.பல்கலைக்கழகத்தில் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியற்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.நாகமுத்து பிரதீபராஜா எழுதிய காலநிலை மாற்றம், அனர்த்த முகாமைத்துவம், HydroClimate of Northern Sri Lanka ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா நாளை புதன்கிழமை (09.08.2023) பிற்பகல்-02 மணி முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியற்றுறை திட்டமிடல் சிரேஷ்ட விரிவுரையாளர் செல்வராஜா ரவீந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப்  பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர். பொ.பாலசுந்தரம்பிள்ளை பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியற்றுறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர். கா.குகபாலன், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வடக்கு மாகாணத்தின் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் ஏ.ஜெகதீசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், யாழப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப் பீடாதிபதியும், புவியியற்றுறைப் பேராசிரியருமான க.சுதாகர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியற்றுறைத் தலைவர் கலாநிதி அ.அன்ரனிராஜன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.