கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நாளை நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா

நூற்றாண்டு காணும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா நாளை புதன்கிழமை(09.08.2023) காலை-09 மணியளவில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் இசுருபாய கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் கலாநிதி.கே.ஏ.டி.புண்யதாச பிரதம விருந்தினராகவும், ஆசிரியர் கல்விக்கான பணிப்பாளர் ஸ்ரீமா தசநாயக்கா, தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான பணிப்பாளர் களனி ஹேமாலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி சு.பரமானந்தம், கோப்பாய் நவமங்கை நிவாச நிறுவுநரும், முன்னாள் ஆசிரியர் கல்விப் பணிப்பாளருமான சுவர்ணா நவரட்ணம் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.