வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் காம்யோற்சவப் பெருவிழாவின் விசேட உற்சவங்களில் ஒன்றான பத்தொன்பதாம் நாள் திருக்கார்த்திகைத் திருவிழா நாளை புதன்கிழமை(09.08.2023) காலை, மாலை உற்சவங்களாகச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
நாளை அதிகாலை- 04.30 மணிக்கு உஷத்காலப் பூசை, அதிகாலை- 05.30 மணிக்கு 108 சங்காபிஷேகம் காலை- 07 மணிக்கு காலைச்சந்திப் பூசை, காலை-08 மணிக்கு சண்முகார்ச்சனை, காலை- 09:30 மணிக்கு சண்முகார்ச்சனை, முற்பகல்- 11 மணிக்கு வசந்தமண்டபப் பூசை, நண்பகல்-12 மணிக்கு கார்த்திகைக் குமரன் வீதி உலா, பிற்பகல்-01 மணிக்கு உச்சிக்காலப் பூசை என்பன இடம்பெறும்.
நாளை மாலை- 05 மணிக்கு அபிஷேகம், மாலை 06.10 மணிக்கு சாயரட்சைப் பூசை, மாலை- 07 மணிக்கு ஸ்ரீ துர்க்காதேவி அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சி, மாலை-07.40 மணிக்கு இரண்டாம் காலப் பூசை, இரவு- 07.45 மணிக்கு வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து கார்த்திகைக் குமரனின் வீதி உலா, இரவு- 11.15 மணிக்கு அர்த்தசாமப் பூசையைத் தொடர்ந்து திருவருட் பிரசாதம் வழங்குதல் என்பன இடம்பெறுமென மேற்படி ஆலய ஆதீன கர்த்தாவும், பிரதமகுருவுமான து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்கள் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடியவர்கள் வழமை போல மாவிளக்குகள் ஏற்றியும், காவடிகள் எடுத்தும் ஆராதனைகள், பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.