யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் கனலி மாணவர் சஞ்சிகையின் இதழ்-04 இன் வெளியீட்டு விழா நாளை வியாழக்கிழமை(10.09.2023) மாலை-03 மணி முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.