பண்டத்தரிப்பில் விழிப்புணர்வும் கலந்துரையாடலும்

பண்டத்தரிப்பு தொழில் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் இளைஞர், யுவதிகளுக்கு   அடிப்படைக் குற்றவியல் சட்டங்களும், ஒழுக்கமும், சிறுவர் சட்டங்கள், பாதுகாப்பான குடும்பம் மற்றும் போதையற்ற உலகு தொடர்பான விழிப்புணர்வும் கலந்துரையாடலும் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(08.08.2023) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு கருத்துரைகள் ஆற்றியதுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது.