குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் மஹோற்சவம் ஆரம்பம்

குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(21.08.2023) முற்பகல்-10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இவ் ஆலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு-7 மணியளவில் திருமஞ்சத் திருப் பவனியும், 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை-09 மணியளவில் திருமுறைப் பாராயண விழாவும்,  27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-11.30 மணியளவில் வேட்டைத் திருவிழாவும், 28 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு-07 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-10 மணியளவில் தேர்த் திருவிழாவும், 30 ஆம் திகதி புதன்கிழமை  காலை-09.30 மணியளவில் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் இரவு-07.30 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் நடைபெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.  


இதேவேளை, மேற்படி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு நேற்றுச் செவ்வாய்க்கிழமை(22.02.2023) முதல் ஆன்மீகச் சொற்பொழிவு ஆரம்பமாகியுள்ளது. நேற்று முற்பகல்-11 மணியளவில்  இடம்பெற்ற நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் கு.பாலசண்முகன் கலந்து கொண்டு "தானமும் தவமும்" எனும் எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.