'அன்னதானக் கந்தன்' எனப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நாளை புதன்கிழமை(30.08.2023) காலை-08 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழாவின் தீர்த்தத் திருவிழா நாளை மறுதினம் வியாழக்கிழமை(31.08.2023) காலை-07 மணியளவிலும் , மெளனத் திருவிழா அன்றையதினம் மாலை-05 மணியளவிலும் நடைபெறும்.