யாழில் நாளை தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம்

"தற்கொலை தடுப்பு" பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக றோட்டறிக் கழகம் பொது அமைப்புக்கள் பலவற்றுடன் இணைந்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(29.08.2023) கொழும்பிலிருந்து ஆரம்பித்த மொத்தமாக 1333 கிலோ மீற்றர்களை உள்ளடக்கிய துவிச்சக்கரவண்டிப் பயணம் நாளை வெள்ளிக்கிழமை(01. 09.2023) யாழ்ப்பாணத்தை வந்தடையவுள்ளது. 

இந் நிலையில் நல்லூர் றோட்டறிக் கழகத்தின் ஏற்பாட்டில் "தற்கொலை தடுப்பு" விழிப்புணர்வு நடை பயணம் நாளை வெள்ளிக்கிழமை மாலை-05 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாக அமைந்துள்ள ஜெட்விங் ஹோட்டலிலிருந்து ஆரம்பமாகி நல்லூர் அரசடி வீதிச் சந்தியில் நிறைவடையவுள்ளது. கொழும்பிலிருந்து துவிச்சக்கரவண்டிப் பயணத்தில் கலந்து கொண்டவர்களும் குறித்த நடைபயணத்தில் இணைந்து கொள்வர். 

இதேவேளை, யாழில் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள விழிப்புணர்வு நடைபயணத்தில் தற்கொலை தடுப்புத் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக அனைத்துச் சமூகத் தன்னார்வலர்களையும் இணைந்து கொள்ளுமாறு நல்லூர் றோட்டறிக் கழகத்தினர் அழைத்துள்ளனர். 

(செ.ரவிசாந்)