யாழில் நீண்டகாலத்திற்குப் பின்னர் ஒன்றுகூடிய வயாவிளான் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள்


யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரியின் 2005 ஆம் ஆண்டு உயர்தரத்தில் கல்விகற்ற மாணவர்கள் பலரும் இன்று ஞாயிற்றுக்கிழமை(06.08.2023) யாழ்.நகரில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இன்று முற்பகல்-11.30 மணி முதல் மாலை- 03.30 மணி வரை குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட அனைவரும் பாடசாலைக் கால பசுமையான நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி மகிழ்ந்தனர்.

குறிப்பாக வயாவிளான் மத்திய கல்லூரி இடம்பெயர்ந்து உரும்பிராயில் சிரமங்களுக்கு மத்தியில் இயங்கிய போதிலும் அக் காலத்தில் பதவி வகித்த நடராஜா மற்றும் கனகராசா அதிபர்களின் உயர்வான பணிகள் மற்றும் தமக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்கள் வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்பான முறையில் கல்வி போதித்த நினைவுகளையும் இந்தச் சந்திப்பின் போது அவர்கள் மீட்டிப் பார்த்தனர்.  

மேற்படி சந்திப்பின் போது தமிழ்ச் சமூகத்தின் தேவைகளை அறிந்து பயன்தரு பணிகளை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது. குறிப்பாக எதிர்காலத்தில் இதுதொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. 

அத்துடன் சந்திப்பை எதிர்வரும் காலங்களிலும் ஒரு குறிக்கப்பட்ட கால இடைவெளியில்  தொடர்ந்தும் முன்னெடுப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டது.     

சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் மதிய போசனம் பரிமாறப்பட்டது.

இதேவேளை, இன்றைய சந்திப்பிற்கான முழுமையான நிதி அனுசரணையைத் தற்போது புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வரும் 2005 ஆம் ஆண்டு உயர்தர மாணவி தாமாக முன்வந்து வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செ.ரவிசாந்)