கோப்பாய்ப் பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினரின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழா நாளை திங்கட்கிழமை (07.08.2023) காலை-09 மணி தொடக்கம் மாலை-03 மணி வரை கோப்பாய்ப் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பாரம்பரிய மற்றும் இயற்கை முறையிலான சைவ, அசைவ உணவுகள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகவும், உணவுத் திருவிழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.