உளவியலாளர் கோகிலா மகேந்திரனின் குடும்பம் ஒரு கதம்பம் நூல் வெளியீடு (Videos)

 


ஈழத்து எழுத்தாளரும், சமூக சிந்தனையாளரும், உளவள ஆலோசகருமான  கோகிலா மகேந்திரன் அவர்களின் குடும்பம் ஒரு கதம்பம் நூல் வெளியீட்டுவிழா நேற்று வெகு விமரிசையாக இடம்பெற்றது.


யாழ். வடமராட்சி அல்வாயில் அமைந்துள்ள கலைஅகத்தில் நேற்று 12.08.2023 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெற்ற மேற்படி நிகழ்வுக்கு கலாநிதி தி. செல்வமனோகரன் தலைமை தாங்கினார்.
முதலாவதாக நூலாசிரியரான கோகிலா மகேந்திரன் அவர்கள் உறவுகள் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 

அதனைத் தொடர்ந்து வாசகர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் நூலாசிரியர் பதிலளித்தார்.

தலைமையுரையினை தொடர்ந்து நூல் வெளியீட்டுரையினை எழுத்தாளர் கந்தர்மடம் அ. அஜந்தன் நிகழ்த்தினார்.


அதனைத் தொடர்ந்து குடும்பம் ஒரு கதம்பம் நூலின் முதற்பிரதியை நூலாசிரியர் கோகிலா மகேந்திரன் வெளியிட்டு வைக்க வடமாகாண கல்வித் திணைக்கள வடமராட்சி வலய உளவள ஆலோசகரான  சி. கருணாகரன் பெற்றுக் கொண்டார்.


நூல் தொடர்பிலான கருத்துரைகளினை யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்களான அஜந்தகுமார், இராஜேஷ்கண்ணன் ஆகியோர் நிகழ்த்தினர்.


இறுதியாக ஏற்புரையினை நூலாசிரியர் கோகிலா மகேந்திரன் நிகழ்த்தினார்.

இறுதியாக நன்றியுரையினை இந்நிகழ்வின் ஏற்பாட்டாளரும், 60 ஆவது நிகழ்வாக இந்நூல் வெளியீட்டை ஒழுங்கு செய்த ஜீவநதி இதழின் பிரதம ஆசிரியர் பரணீதரன் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் கல்வியலாளர்கள், வாசகர்கள், ஊரவர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நூலில் வெளியான திருமணம், குடும்பம், பெற்றோரியம் சார்ந்த உளவியல் மைய கட்டுரைகள் ஜீவநதி இதழில் தொடராக வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.