கொக்குவில் மஞ்சவனப்பதி முருகனுக்கு நாளை கொடியேற்றம்

கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய சோபகிருது வருட மஹோற்சவப் பெருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை(13.08.2023) முற்பகல்-11 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

பதினெட்டுத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா நடைபெறும். 

எதிர்வரும்-22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு-07 மணியளவில் திருமஞ்சத் திருவிழாவும், 26ஆம் திகதி சனிக்கிழமை இரவு-07 மணியளவில் கைலாசவாகனத் திருவிழாவும், 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-06 மணியளவில் தண்டாயுதபாணி உற்சவமும், 28 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு-07 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-08 மணியளவில் தேர்த் திருவிழாவும், 30 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல்-11 மணியளவில் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் மாலை-06 மணியளவில் தீர்த்தோற்சவமும் நடைபெறுமென மேற்படி ஆலயத் தர்மகர்த்தா சபையினர் தெரிவித்துள்ளனர்.