குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் விசேட அறநெறிச் சொற்பொழிவும் கூட்டுப் பிரார்த்தனையும்

 

விசேட அறநெறிச் சொற்பொழிவும் கூட்டுப் பிரார்த்தனையும் நிகழ்வு இன்று   வெள்ளிக்கிழமை(25.08.2023) மாலை-04 மணி முதல் யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் மேற்படி ஆச்சிரமப் பொறுப்பாளர் எஸ்.சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது.

            


இதன்போது குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவச் சிறார்கள் கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

மேற்படி நிகழ்வில் யாழ்.சுதுமலை சிந்மய பாரதி வித்தியாலய ஆசிரியர் நடராஜா புஷ்பராஜா கலந்து கொண்டு "சைவ வாழ்வியலும் அறநெறிச் சிந்தனைகளும்" எனும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். அதனைத் தொடர்ந்து  ஓய்வுநிலைக் கிராம சேவகர் சோ.பரமநாதனால் மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டுச் சரியாகப் பதிலளித்த மாணவர்களுக்குப் பாராட்டுக்களும் வழங்கப்பட்டன. 

(செ.ரவிசாந்)