யாழ். நகரில் அமிர்தலிங்கத்தின் நினைவுப் பேருரை நிகழ்வு

               


முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 96 ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(27.08.2023) மாலை-04 மணி முதல் யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.


எதிர்க்கட்சித்  தலைவர் அமிர்தலிங்கத்தின் முன்னாள் செயலாளர் இ.பேரின்பநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் கெளரிகாந்தன் வரவேற்புரையையும், தென்னிந்தியத் திருச் சபையின் முன்னாள் பேராயர் கலாநிதி- எஸ்.ஜெபநேசன், டான் குழுமத் தலைவர் எஸ்.எஸ்.குகநாதன் ஆகியோர் சிறப்புரைகளையும்,  முன்னாள் வடகிழக்கு மாகாண சபையின் செயலாளர் கலாநிதி.கா.விக்னேஸ்வரன் நினைவுப் பேருரையையும் ஆற்றினர். அமிர்தலிங்கத்தின் பெறாமகன் தங்க முகுந்தன் நன்றி உரை நிகழ்த்தினார்.


(செ.ரவிசாந்)