பிரித்தானியத் தமிழ் பல் வைத்திய சங்கத்தினரால் வடமாகாண மக்களுக்கான நன்கொடை

பிரித்தானியத் தமிழ் பல் வைத்திய சங்கத்தைச் சேர்ந்த பல் வைத்திய குழுவினர் இன்று வியாழக்கிழமை(24.08.2023) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற நன்கொடை நிகழ்வில் வடமாகாண வைத்தியசாலைகளின் பல்வைத்திய நிலையங்களுக்குத்  தேவையான ஒரு தொகுதிப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதேவேளை, குறித்த குழுவினர் கடந்த ஒருவார காலமாக எமது பிரதேசங்களைச் சேர்ந்த சில பாடசாலைகளுக்கும், வைத்தியசாலைகளுக்கும், முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு தற்கால நிலைமை தொடர்பாக கலந்து ஆலோசித்ததுடன் தேவையானவர்களுக்கு சில பற்சிகிச்சைகளையும் வழங்கியிருந்தனர். அதுமட்டுமின்றி வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் பல் சிகிச்சை நிலையங்களுக்குத் தேவையான ஒரு தொகுதிப் பொருட்களையும் நன்கொடையாக வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


(செ.ரவிசாந்)