இணுவிலில் 30 கோவில் நூல்கள் வெளியீட்டு விழா

பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் எழுதிய 30 கோவில் நூல்கள் வெளியீட்டு விழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(24.09.2023) மாலை-03 மணி முதல் வாழ்நாட் பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் தலைமையில் இணுவில் அறிவாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் வாழ்த்துரைகளைத் தொடர்ந்து பண்டிதர் நா.கடம்பேஸ்வரன் நூலின்  வெளியீட்டுரையையும், வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளரும், எழுத்தாளருமான சு.ஸ்ரீகுமரன் நூலின் ஆய்வுரையையும் ஆற்றவுள்ளனர். 

இதேவேளை, மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான இணுவைக் கந்தன் அன்னதானச் சபையினர் அழைத்துள்ளனர்.