தியாகதீபம் திலீபன் நினைவாக நல்லூரில் நாளை இரத்ததான முகாம்

தியாகதீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நாளை சனிக்கிழமை(23.09.2023) காலை-09 மணி தொடக்கம் நண்பகல்-12 மணி வரை நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவிட முன்றலில் இரத்ததான முகாம் நிகழ்வு நடைபெறவுள்ளது.

தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.