தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ்.நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்குமாறு கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரால் இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதவான் இரண்டாவது தடவையாகவும் இன்று வெள்ளிக்கிழமை(22.09.2023) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

திலீபனின் நினைவேந்தல் வன்முறையாக மாற்றமடைவதால் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அவசரமாகத் தடை விதிக்க வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் மீண்டும் மன்றில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. குறித்த மனுவை இன்றையதினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க முடியாதெனத் தெரிவித்தார்.         

இதேவேளை,  குறித்த மனு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.           

(செ.ரவிசாந்)