கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை குறைந்தது ஒன்றரை மாதமளவில் தாமதமாகுமெனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஹேமாகம பிடிபன பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் நடாத்துவதற்குத் திட்டமிட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(21.09.2023) நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.