இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் வரி அதிகரிப்பு!

                   


இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி 10 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை(22.09.2023) முதல் இந்த வரி அதிகரிப்பு அமுலுக்கு வருகின்றது. 

எனினும், உள்ளூர்ச் சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்படமாட்டாதெனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.