முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் 38 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு


உடுவில், மானிப்பாய்த் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் உடுவில் கிராமசபைத் தலைவருமான விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 38 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நாளை சனிக்கிழமை(02.09.2023) காலை-07 மணிக்கு யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியடியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து முற்பகல்-10.30 மணிக்கு யாழ். சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி முன்றலில் அமைந்துள்ள வி.தர்மலிங்கத்தின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தும், முற்பகல்-11.30 மணிக்கு வலிகாமம் தெற்குப் பிரதேசசபை முன்றலில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தும், மாலை-04.00 மணியளவில் கோப்பாயில் இயங்கி வரும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் அமைந்துள்ள தர்மலிங்கத்தின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தும், அதனைத் தொடர்ந்து நினைவுரைகளும் இடம்பெறுமென நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேற்படி நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.