வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பெருந் திருவிழாவின் பதினெட்டாம் திருவிழா மாலை உற்சவம் இன்று வியாழக்கிழமை(07.09.2023) மாலை சிறப்பாக நடைபெற்றது.
இன்று மாலை வசந்தமண்டபப் பூசை, கொடித்தம்பப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லூர்க் கந்தப் பெருமான், வள்ளி- தெய்வயானை சமேதரராக பூதகண வாகனத்தில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் புடைசூழ உள்வீதியிலும், மாலை-06 மணியளவில் வெளிவீதியிலும் உலா வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
(செ.ரவிசாந்)
.