தையிட்டி சட்டவிரோத விகாரைக்காகத் தனியார் காணிகளை ஆக்கிரமித்துச் சுவீகரிக்கும் நோக்கில் காணி அளவீடு செய்யும் நடவடிக்கை நாளை செவ்வாய்க்கிழமை(12.09.2023) முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கெதிராக நாளை காலை-08.30 மணியளவில் மேற்படி விகாரையின் முன்பாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துப் பௌத்த சிங்களமயமாக்கித் தமிழர்களின் சொந்த நிலத்தில் தமிழர்களை அகதிகளாக்கும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் இந்தச் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்துவதற்காகத் தையிட்டி சட்டவிரோத விகாரையின் முன் தமிழர்களாய்த் திரளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.