நல்லூரான் தேர்த் திருவிழாவை முன்னிட்டு நீண்டதூரப் பாத யாத்திரை யாழ் வந்தடைவு

      


வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து கடந்த-07 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமான வேல்தாங்கிய நடை பாதயாத்திரை இன்று திங்கட்கிழமை(11.09.2023) அதிகாலை-01 மணியளவில் யாழ்.தென்மராட்சி மிருசுவிலை வந்தடைந்தது.

இந் நிலையில்  குறித்த பாதயாத்திரை இன்று ஐந்தாவது நாளாக கொடிகாமம், சங்கத்தானை ஊடாக சாவகச்சேரியை வந்தடைந்தது. இன்று இரவு சாவகச்சேரி சிவன் கோயிலில் தங்கியிருக்கும் பாதயாத்திரைக் குழுவினர் நாளை காலை மீண்டும் நல்லூர்க் கந்தன் ஆலயத்தை நோக்கித் தமது பாத யாத்திரையைத் தொடரவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

(செ.ரவிசாந்)