யாழில் நாளை மின்தடைப்படும் பகுதிகள்...

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(14.09.2023) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை காலை- 08.30 மணி தொடக்கம் மாலை-05 மணி வரை யாழ்.காரைநகர் தோப்புக்காடு, ஊரி, ,களபூமி பாலக்காடு அம்மன் கோவிலடி, காரைநகர் இலங்கை போக்குவரத்துச் சபை அலுவலகம், காரைநகர் சீனோர் படகுத்துறை, காரைநகர் கடற்படைத் தளம், காரைநகர் கடற்படை முகாம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.